நாட்டில் 31 கோடிக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – ஐ.சி.எம்.ஆர் அறிக்கை!!

0

உலகம் முழுவதும் சுமார் 1 ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று மக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை மேற்கொண்டுள்ள கொரோனா பரிசோதனை குறித்த தகவலை ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக தற்போது நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணிகளையும் பரிசோதனை மேற்கொள்வதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறி தென்பட்டாலே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் அனைவரும் கட்டாய முறையில் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் மேற்கொண்ட பரிசோதனை குறித்த தகவலை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர் உச்சத்தை அடையும் பெட்ரோலின் விலை – வாகன ஓட்டிகள் ஷாக்!!

அதன்படி தற்போது வரை நாட்டில் அதாவது மே 13ம் தேதி நிலவரப்படி மொத்தமாக 31,13,24,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று(மே 13) ஒரே நாளில் நாட்டில் 18,75,515 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here