Tuesday, April 16, 2024

கரூரில் வேகமெடுக்கும் கொரோனா – காவல்துறை அதிகாரிகள் உட்பட பாதிப்பு..!!

Must Read

கரூரில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

காவல் ஆய்வாளரின் டிரைவருக்கு கொரோனா:

கரூர் நகர போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றும் காவலருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று வெளியான முடிவில் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்துக் காவலர்கள் 30 பேருக்கு இன்று (ஜூலை 23) கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

கொரோனாவால் களைகட்டிய ‘செக்ஸ் பொம்மைகள்’ ஆன்லைன் விற்பனை – மும்பை முதலிடம்!!

corona virus
corona virus

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் முதல்நிலை காவலர் ஆகிய இருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்குத் திரும்பினர்.

corona ward in karur
corona ward in karur
கடைக்காரர்களுக்கும் தொற்று:

மேலும், திண்டுக்கல் சாலையில் உள்ள திரையரங்கம் எதிரே உள்ள டீக்கடைக்காரருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அருகேயுள்ள மேன்ஷனில் தங்கியிருந்தவருக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனால் மேன்ஷனில் தங்கியுள்ளவர்களுக்கு இன்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

corona spread
corona spread

மேலும், பஞ்சமாதேவியில் மளிகை நடத்தி வருபவர், திருச்சியில் மளிகை நடத்தி வரும் தோகைமலை பகுதியைச் சேர்ந்தவர் என மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது கரூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., 4 தேங்காய் மற்றும் எண்ணெய்? பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என விவசாய சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -