மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – ஒரே நாளில் கட்டுக்கடங்காமல் அதிகரித்த நோய் பரவல்!

0
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா - ஒரே நாளில் கட்டுக்கடங்காமல் அதிகரித்த நோய் பரவல்!

இந்தியாவில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்கம் அதிகரிப்பு:

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி கொண்டிருக்கின்ற நிலையில் மக்கள் இது கொரோனாவின் நான்காவது அலையாக இருக்கலாம் என்று பயத்துடனும் அச்சத்துடனும் இருக்கின்றனர். தற்போது வரை இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையின்படி,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 13,615 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.மேலும் 20 பேர் இறந்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,36,52,944 ஆக உயர்ந்தது மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,474-ஆக உயர்ந்தது.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடந்த ஒரு நாளில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 13,265 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,96,427 ஆக உயர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here