தமிழகத்தில் கொரோனா 3ம் அலை தொடங்கிவிட்டது – சுகாதார துறை அமைச்சர் பகிர் தகவல்!!

0

தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு, கொரோனா பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளதால் மூன்றாம் அலை தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அமைச்சர் எச்சரிக்கை:

தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில். சமீபத்தில் திடீரென ஓமைக்ரான் பரவல் தீவிரம் எடுத்தது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா 3ம் அலை தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனாவின் மூன்றாம் அலை சுனாமியாக தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இதனால், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி இயக்கத்தை நாளை காலை 9.30 மணிக்கு முதல்வர் தொடங்கி வைப்பார் என தெரிவித்தார்.

முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கும் என்றும்,அவற்றை கவனிக்க குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சென்னை நகரில் மீண்டும் பரவல் ஆரம்பித்துவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பரவலால் பீதியில் இருந்த மக்களுக்கு இந்த தகவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here