தஞ்சையில் மேலும் 13 மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா – அதிர்ச்சியில் மக்கள்!!

0

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 2 பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொரோனா தாக்கியுள்ளது.

தஞ்சை:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது கல்லூரி மற்றும் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் 12ம் வகுப்பிற்கு விடுமுறை அளிப்பது குறித்தும் பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது மீண்டும் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.

school students

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஜூன் மாத்திற்கு ஒத்திவைப்பு?? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

அதன்படி தஞ்சையில் புதிதாக 2 பள்ளிகளில் 13 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தற்போது தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது 243 ஆக அதிகரித்துள்ளது. என்ன செய்தாலும் மாணவர்களிடம் கொரோனா பரவுவதை தடுக்க முடியாததால் மக்கள் அனைவரும் வேதனை அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here