ஒரே நாளில் சரசரவென சரிந்த கொரோனா தொற்று எண்ணிக்கை.. மீளுமா இந்தியா??

0

இந்தியாவில் மக்கள் மனதில் மீண்டும் நம்பிக்கையை விதைக்கும் விதமாக கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களை விட கடந்த 24 மணி நேரத்தில் குறைவாக பதிவாகியுள்ளது.

தொற்று பாதிப்பு:

மத்திய அரசு வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில்  18,795 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 26,030 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,36,97,581 ஆக உள்ளது. மேலும் மொத்த உயிரிழப்பு 4,47,373 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தகவலின்படி இந்தியாவில் 26,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இன்று பதிவான எண்ணிக்கை சிறிது குறைவு என்பதால் மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதன் பரவலை கட்டுக்குள் வைக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here