இந்தியாவில் ஒரே நாளில் 30,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று – மூன்றாம் அலை அறிகுறியா?

0

கடந்த 4 நாட்களாக 30 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று நேற்றைய நிலவரப்படி சற்று அதிகரித்து 30,570 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 431 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் தொடர்ச்சியான ஊரடங்கால் இரண்டாம் அலையின் தொற்று விகிதம் குறையத் தொடங்கியது. ஆனால், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குழந்தைகளே பரவலாகப் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் மருத்துவத் துறையினர் சிலர் சொல்கின்றனர். மேலும் நிபுணர்களும் செப்டம்பர் இறுதியில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் கணித்து உள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல ஜூலை மாதத்தில் குறைந்த தொற்று தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குறைவான தொற்று நேற்று சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, புதிதாக 30,570 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,47,325 ஆக உயர்ந்தது.

இறப்பு எண்ணிக்கை 431 ஆக பதிவாகியுள்ளது. இதனால், இந்தியாவில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,43,928 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,303 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,25,60,474 உயர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here