கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா? – மூன்றாம் நாளாக 30,000க்கும் கீழ் பதிவாகிய தொற்று!!

0
கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா? - மூன்றாம் நாளாக 30,000க்கும் கீழ் பதிவாகிய தொற்று!!

இந்தியாவில் தொடர்ந்து மூன்றாம் நாளாக கொரோனா தொற்று 30,000க்கும் குறைந்து பதிவாகியுள்ளது. அதாவது கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக தொற்று பாதிப்பு 25,404 ஆக பதிவாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 339 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த வருடத்தின் மே மாதத்தில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தொற்று எண்ணிக்கை உச்சம் தொட்டது. பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா? - மூன்றாம் நாளாக 30,000க்கும் கீழ் பதிவாகிய தொற்று!!
கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா? – மூன்றாம் நாளாக 30,000க்கும் கீழ் பதிவாகிய தொற்று!!

அதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டது. பின்னர் மூன்றாம் அலையும் எச்சரிக்கையும் விடப்பட்டது. அதற்கேற்றாற் போல் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்தது. இதனால் மக்களும் அச்சத்திற்கு உள்ளாகினர்.

கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா? - மூன்றாம் நாளாக 30,000க்கும் கீழ் பதிவாகிய தொற்று!!
கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா? – மூன்றாம் நாளாக 30,000க்கும் கீழ் பதிவாகிய தொற்று!!

இந்நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 நாட்களாக தொற்று எண்ணிக்கை 30,000 க்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 25,404 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 339 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தற்போது உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here