மக்களே உங்களுக்கு இது உங்களுக்கு தான் – கொரோனவை கட்டுக்குள் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

0
Coronavirus on scientific background

இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த லாக்டவுன் தான் ஒரே தீர்வா என்று பார்த்தால், பதில் இல்லை. கொரோனாவிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனின் சுய கட்டுப்பாடும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம்

கடந்த 2020ஆம் ஆண்டு முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்த பேரழிவு கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து ஒரு ஆண்டுகள் ஆன பின்னும் அதன் வடு இன்னமும் மறைந்தபாடில்லை. இன்றைக்கு சரியாகும், நாளைக்கு சரியாகும் என காத்திருந்தது தான் மிச்சம். மக்கள் புகழ்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் கூட இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து இந்தியாவில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இப்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு. தடுப்பூசியினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாமா, அல்லது பொது முடக்கம் அறிவித்து கொரோனாவை கட்டுப்படுத்தலாமா என மக்கள் குழம்பி இருக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பட்சத்திலேயே இந்த நோய் தொற்றுகள் எளிதில் நம் உடலில் பரவி விடுகிறது. எனவே தான் சத்தான காய்கறிகள் பழங்கள் என சாப்பிட்டு வர வேண்டும். கடைகளில் பாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

விற்பனைக்கு வருகிறது ரியல்மி 8 ப்ரோ – சிறப்பம்சங்கள் இதோ!!

எப்படி இருந்தாலும் நம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள முடியும். வீட்டிலிருந்து வெளியேறும் போது கட்டாயமான முறையில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன், கை கால்களை நன்றாக கழுவ வேண்டும். அடிக்கடி சூடுநீர் பருக வேண்டும். கஷாயம் வைத்து குடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான காய்கறிகள் பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

செயற்கை உணவு முறைகள், துரித உணவுகள் உண்ணுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டில் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். இவையெல்லாவற்றையும் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இதெல்லாம் செய்தால் கொரோனா சரியாகி விடுமா என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் இவற்றை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இதுதான் மருத்துவர்களும் கூறுகிறார்கள். மக்களாகிய நாம் தான் ஜாக்கிரதையாக, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கொரோனா கட்டுக்குள் சிக்கி பரிதபிக்கப்பட்ட நிலமைக்குள் வந்துவிடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here