இன்னும் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும்: தமிழகத்தை எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்

0

இன்னும் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும்: தமிழகத்தை எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்

தமிழகத்தில் இனி வரும் 2 வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொடும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான IHMI எச்சரித்து உள்ளது.

தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,000 ஐ நெருங்கியது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. IHMI என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தி தமிழகத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தமிழகத்தை எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்

மேலும் தடுப்பூசி செலுத்துவது மட்டுமே வைரஸ் வீரியத்தை கட்டுப்படுத்தி பலி எண்ணிக்கையை குறைப்பதற்கு ஒரே வழியாகும் என IHMI தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் உச்சம் தொடும் போது உயிரிழப்பும் அதிகரிக்க கூடும் என்று கூறியுள்ளது. ஒரு நாளில் 800 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி மற்றும் கைகளை சுத்தப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றி கொரோனா பரவல் வீரியத்தை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும். ஐஐடி ஆராய்ச்சியாளர்களும் மே மையத்தில் கொரோனா உச்சம் தொடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here