Thursday, May 13, 2021

மூச்சு திணறல் காரணமாக 11 கொரோனா நோயாளிகள் பலி – செங்கல்பட்டில் நடந்த சோகம்!!

Must Read

நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு தற்போது நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆக்சிஜனை பற்றாக்குறை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு தற்போது தமிழகத்தில் பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி வருகின்றனர். மக்களை மேலும் சோகமடைய செய்யும் வகையில் நாட்டில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தற்போது அந்த வகையில் செங்கல்பட்டில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதன்படி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 கொரோனா நோயாளிகள் நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து கூறியதாவது, மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு கையில் இருந்தும், எதிர்பாராத விதமாக உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது என்றும் இதுகுறித்த உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஊழியர்களுக்கு மே 17 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டம் !!!

ஊழியர்களுக்கு மே 17 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டம் !!! மே 17 முதல் அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -