வாட்டி வதைக்கும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேல் பதிவான தொற்று பாதிப்பு!!

0
தமிழகத்தில் கொரோனா 5-ம் அலை?? ஐந்து மாவட்டங்களில் நோய் தொற்று அதிகம்! அமைச்சர் பேட்டி!!
புது வீரியத்துடன் பரவும் BA 5 வகை கொரோனா - நிலைகுலைந்த தலைநகர் சென்னை! பொதுமக்கள் பீதி!!

அடுத்தடுத்த அலையாக ஏற்படும் கொரோனா தொற்றால் தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் இன்றைய தகவலின்படி, புதிதாக 25,166 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 437 பேர் நோய் தொற்றுக்கு பலியாகி இறந்துள்ளனர்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே மனித குலம் கொரோனவால் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. முதல் அலையின் போது தடுப்பூசி இல்லாததால் ஏற்பட்ட இறப்புகள், இரண்டாம் அலையின் போது உருமாறிய டெல்டா வைரஸின் வேகம் அதிகமாக இருந்தாலும் தடுப்பூசியின் பயனால் இறப்புகள் குறைக்கப்பட்டுள்ளது.

 

எதிர்பார்த்ததை விட இரண்டாம் அலை விரைவிலேயே கட்டுக்குள் வந்தது. தற்போது மூன்றாம் அலை உலகநாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,166 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் தற்போது வரை இத்தொற்றால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 3,22,50,679 ஆகஅதிகரித்துள்ளது.

அதே சமயம் புதிதாக 437 பேர் இறந்துள்ளனர். மேலும் 3,69,846 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here