இந்தப் பயணிகளுக்கு இனி கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்., மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!

0
இந்தப் பயணிகளுக்கு இனி கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்., மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!
இந்தப் பயணிகளுக்கு இனி கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்., மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு எடுத்து வருகிறது.

கொரோனா:

மூன்று வருடங்களாக உலக நாடுகளை உலுக்கிய கொரோனா சிறிது காலம் ஓய்வில் சென்ற நிலையில் மக்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பிறப்பிடமான சீனாவில் பரிணாம வளர்ச்சி பெற்று ஒமிக்ரான் BF.7 ஆக சீனா, ஜப்பான் என நாடுகளில் ஊடுருவி பல மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவில் சில இடங்களில் புதிய வகை கொரோனாவால் பரவி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சில மாநிலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என மாநில அரசால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

2022ல் மாபெரும் சாதனை படைத்த ரயில் சேவை., பரவா இல்லையே, எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தானா!!

 

மேலும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை பலப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது கொரோனா அதிகம் பரவிய சீனா, ஜப்பான், ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரவுள்ள விமானப் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் 100% கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here