மாஸ்க் அணிந்த கொரோனா மாதா – கடவுளிடம் வேண்டும் மக்கள்!!!

0

உ.பி மாநிலம் பிரதாப்கார்க் மாவட்டத்திற்குள்பட்ட ஜூகி சுகுல்பூர் என்ற பகதியை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்த ஒரு வேப்ப மரத்தடியில் “கொரோனா மாதா” என்ற கோவிலை கட்டி வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

கடவுளிடம் வேண்டும் மக்கள்:

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் சிக்கி இந்தியா நிலைகுலைந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மருத்துவர்கள் மக்கள் உயிர்காக்க இரவு பகல் பாராமல் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். வீரியமிக்க தொற்றின் இரண்டாம் அலையில் சிக்கி நாடு தத்தளித்து வருகிறது. பாதிப்புகள் அதிகமாக உள்ள பல மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று. எனவே அம்மாநிலத்தில் இருந்து கொரோனா தொற்றை விரட்ட சிலர் யாகங்களை செய்து வருகின்றனர்.

கொரோனா மாதா கோயில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தீயாய் பரவியதைத் தொடர்ந்து அண்டை கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜுஹி ஷுகுல்பூருக்கு வந்து கொரோனா மாதாவை வணங்கிச் சென்றனர். மக்கள் கூட்டம் மிகுதியாக வரத் தொடங்கியதால் கொரோனா மாதாவின் சிலைக்கு நோய்த்தொற்று பரவிவிடும் என்று அஞ்சிய கிராம மக்கள் கொரோனா மாதா சிலைக்கும் முகக்கவசம் அணிவித்தனர்.

கிராமவாசிகள் இப்போது கோவிலில் தினசரி பிரார்த்தனை நடத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க கொரோனா மாதாவின் ஆசீர்வாதத்தை வேண்டுகின்றனர். மேலும் கொரோனா மாதாவின் வழிபாட்டால் கிராமத்தில் வைரஸ் தொற்று ஏற்படாது என்று நம்புவதாக மக்கள் கூறுகின்றனர். இதனிடையே கொரோனா மாதா கோயிலில் மக்கள் பிரார்த்தனை செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here