தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழுவிபரம் இதோ!!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மே 6 முதல் 20 ஆம் தேதி வரை பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்

நாளுக்கு நாள் கொரோனா அபாயம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இந்த இரண்டாவது அலை முதல் அலையை விட படுமோசமாக இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் மக்கள் மத்தியிலும் இதை பற்றிய பீதி அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவித்தால் கண்டிப்பாக மக்களால் தாக்கு பிடிக்க முடியாது. சமூகத்தின் நிலையும் கேள்விக்குறியாகி விடும். எனவே தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் போடப்பட்டுள்ளது. அதாவது மே 6 ஆம் தேதி காலை முதல் 20 ஆம் தேதி காலை 4 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து தனியார், அரசு நிறுவனங்களில் 50% பணியாளர்களுடன் தான் இயங்க வேண்டும். ரயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் 50% இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும்.

மயூ போட்டோவை பார்க்கலாம் இருக்க வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் கோபி – குழப்பத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!!

வணிக வளாகங்கள் யாவும் அடைக்கப்பட வேண்டும். அத்தியாவசிய தேவையான பால், மருந்துகள் காய்கறிகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி. மேலும் ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதி. திரையரங்குகள் யாவும் இயங்காது. மீன் மற்றும் இறைச்சி கடைகள் வார நாட்களில் 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கும். வார இறுதி நாட்களில் கறிக்கடைகள் இயங்க தடை. இந்த தட்டுப்பாடுகள் அனைத்தும் மே 20 காலை 4 மணி வரை பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here