Thursday, May 13, 2021

இன்று இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அதிரடி!!

Must Read

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான நடைமுறைகளையும் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் எதிரொலி

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிக்கொண்டு வருகிறது. ஆனாலும் இந்த கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து தான் வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கட்டுப்படுத்து பல மாநிலங்களில் முழு ஊரடங்குகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் வாரத்தில் இறுதியில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை பின்பற்றப்பட்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா பரவல் அடங்கிய பாடில்லை. இதனால் கர்நாடக மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது இன்று இரவு முதல் தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலால் கோபிக்கு நடந்த சோகம் – அவரே வெளியிட்ட பதிவு!!

இது குறித்து எடியூரப்பா கூறியதாவது, மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், பால், இறைச்சி போன்றவை விநியோகம் செய்யப்படும். இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருக்கும். மேலும் இலவச தடுப்பூசிக்கான வேலைகளும் நடந்துகொண்டுள்ளது. கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை கிடையாது. ஏற்கனவே 300 டன் ஆக்சிஜனை மத்திய அரசு விநியோகித்து வந்தது. தற்போது 800 டன்னாக அதனை உயர்த்தியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனா 2வது அலையின் கோர தாண்டவம் – 3,070 போலீசார் பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் 3,070 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது காவல்துறை தகவல்: தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -