தீவிரமாகும் கொரோனா தொற்று.. உடனடி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!!

0
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. எனவே தொற்று அதிகரித்துள்ள மாநிலங்களில் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு எட்டு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்தால் சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதை தவிர நாளுக்கு நாள் இந்த வைரஸ் உருமாறி வேறு வருகிறது. என்ன தான் அரசு தொற்று பரவலை தடுக்க முயற்சித்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி முழுமையாக கொரோனா தாக்குதலில் இருந்து வெளியே வர முடியாது என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தொற்று அதிகமுள்ள அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடித்ததில் ஒவ்வொரு நகரத்திலும், கொரோனா தொற்று பரவலின் வேகத்தை கண்காணிக்க வேண்டும். மேலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் அம்மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here