இந்தியாவில் ஒரே நாளில் 400 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. 30,948 பேருக்கு புதிதாக தொற்று!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 403 பேர் இந்நோய் தொற்றுக்கு இறந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து தொற்று பாதிப்பு குறையும் வேளையில் மீண்டும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு பழையபடி உயர்ந்து வருகிறது. இதில் நேற்று மட்டும் நோய் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

மத்திய அமைச்சகத்தின் தகவலின்படி, நேற்று மட்டும் 30,948 பேருக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 403 ஆக பதிவாகியுள்ளது. இதில் 145 பேர் மஹாராஷ்டிராவில் மட்டும் இறந்துள்ளனர். 83 பேர் கேரளாவில் பலியாகியுள்ளனர்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 17,106 தொற்று எண்ணிக்கையுடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.  கர்நாடகா மற்றும் ஆந்திரா முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here