கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1.20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு- சுகாதார அமைச்சரகம் தகவல்!!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இது கடந்த 58 நாட்களில் மிக குறைவாகும். ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த அறிக்கையின்படி இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து  தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள தொற்றின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 80,745 ஆக குறைந்துள்ளது. மேலும் தொற்றில் இருந்து நாடு முழுவதும் 2.67 கோடிக்கும் அதிகமானோர் மீண்டு வந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை 1,97,894 நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,55,248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதிதாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3,380 ஆகும். தொடர்ந்து 23 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதேபோல் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கிறது. மேலும் சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி, நாட்டில்  இதுவரை 22.78 கோடி  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here