தமிழகத்தில் தீவிரமெடுக்கம் கொரோனா.,, நிரம்பி வரும் ஹாஸ்பிடல் வார்டுகள்!! மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?

0
தமிழகத்தில் தீவிரமெடுக்கம் கொரோனா.,, நிரம்பி வரும் ஹாஸ்பிடல் வார்டுகள்!! மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?
தமிழகத்தில் தீவிரமெடுக்கம் கொரோனா.,, நிரம்பி வரும் ஹாஸ்பிடல் வார்டுகள்!! மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?

தமிழகத்தில் பருவக்காய்ச்சல் தலைதூக்கி உள்ள நிலையில், கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வார்டுகளும் நிரம்பி வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா:

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா 3 வது அலை ஏற்பட்டது. ஆனால் ஓமைக்ரான் வைரஸ் கொரோனாவை போல் இல்லாமல் லேசான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் சுகாதாரத் துறையின் கடும் நடவடிக்கையால் ஓமைக்ரான் விரைவாகக் கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநிலத்தில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தற்போது இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகிறது. இதுமட்டுமில்லாமல் மக்களை மேலும் அச்சப்படுத்தும் வகையில் 300 பேர் டெங்கு காய்ச்சலாலும், 300 பேர் பன்றி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பரவும் “பன்றிக்காய்ச்சல்”.,, பள்ளி சிறுவன் உட்பட 2 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் பீதி!!

இந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது தினசரி கொரோனா பாதிப்பு 500 ஐ எட்டியுள்ளது. இந்த வகையில் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here