இந்தியாவை உலுக்கும் கொரோனா மரணங்கள் !!!… இன்றைய நிலவரம் என்ன??

0

கொரோனா நோய் தொற்று 2019 ஆம் ஆண்டு தன்னுடைய கோரமுகத்தை நாடு முழுவதும் காட்ட தொடங்கிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதன் தாக்கத்திற்கு 1,34,154 பேர் ஆளாகியுள்ளனர். மேலும் 2,887 பேர் பலியாகியுள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் அது முதல், இரண்டாம் அலை என்று தன் வீரியத்தை காட்டிக்கொண்டிருந்தது. முதல் அலையில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கு முன்பே இரண்டாம் அலை வீச தொடங்கியது. அதிலிருந்து மக்களை காக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் அதனிடம் அகப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 172,401,059 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 155,238,219 பேர் இதிலிருந்து விடுபட்டு உள்ளனர். உலகளவில் அமெரிக்கா, 34,153,475 எண்ணிக்கையோடு மிகவும் பாதிக்க பட்ட நாடாக உள்ளது. அதை தொடர்ந்து இந்தியா,பிரேசில், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.அதை தொடர்ந்து கர்நாடகா,மகாராஷ்டிரா,கேரளா,ஆந்திரா உள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here