இந்தியாவில் வீழ்ச்சி அடையும் கொரோனா பாதிப்பு… தற்போதைய நிலவரம் உள்ளே!!!

0

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 132,364 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,00,000 ஐ மீறாமல் ஏழு நாட்களாக தொடருவதால் புதிய தொற்றுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்த வண்ணம் உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 2,713 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளது.இதுவரை மொத்த இறப்பு எண்ணிக்கை 340,702 ஆக உள்ளது. மேலும் 24,405 புதிய நோய் தொற்று எண்ணிக்கையுடன் மாநிலங்களவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

  தமிழ் நாட்டை தொடர்ந்து 18,324 தொற்று எண்ணிக்கையுடன் கர்நாடகா, 18,853 தொற்று எண்ணிக்கையுடன் கேரளா, 15,229 தொற்று எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா, 11,421 தொற்று எண்ணிக்கையுடன் ஆந்திரா,  8,811 தொற்று எண்ணிக்கையுடன் மேற்கு வங்கம் உள்ளன. நகர வாரிய பார்க்கும் பொழுது பெங்களூரில்  4,095 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை,கொல்கத்தா,மும்பை மற்றும் டெல்லி நகரங்கள் உள்ளது. இருப்பினும் தொற்று மெல்ல மெல்ல  குறைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை படி நாடு முழுவதும்  இதுவரை 35,74,33,846 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன, இதில் நேற்று மட்டும் 20,75,428 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here