அரசு மருத்துவமனைகளில் 85 செவிலியர் காலிப்பணியிடங்கள் – இன்று நேர்முகத்தேர்வு!!

0

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 85 செவிலியர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. 500க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை யாரும் பின்பற்றவில்லை.

நேர்முக தேர்வு:

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டது.

10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இந்த பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டனர். இன்று நடைபெற்ற இந்த நேர்முக தேர்வில் 500 க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வு விக்டர் சிமோனல் வீதியில் உள்ள சட்டசபை அருகே உள்ள சுகாதார துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் கலந்துகொண்டவர்களில் 85 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பல செவிலியர் பணியிடங்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்பும் பொருட்டு இந்த நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here