கொரோனவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கும் திட்டம்… நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!!!

0

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ. 5 லட்சம் செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

தற்போது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கோவிட்-19 தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருந்தாலும் இந்த பெருந்தொற்று பல உயிர்களை தற்போது வரை பலி வாங்கியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யவும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கிடவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த திட்டத்தை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here