6 மாநிலங்களில் வேகமெடுக்கும் கொரோனா – மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறை!!

0

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு, 17,407 பேர் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி இந்தியாவில் 18,855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் அதிகபட்ச எண்ணிக்கை மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மராட்டியத்தில் மட்டுமே 9,855 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கேரளாவில் 2,765 பேரும், பஞ்சாப்பில் 772 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதுவரை 85.51 சதவீதம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தகவல்கள் கூறுகிறது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 11 லட்சத்து 56 ஆயிரத்து 923 பேராக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 89 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்ச உயிரிழப்பாக மராட்டிய மாநிலத்தில் 42 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்ததாக கேரளாவில் 15 மற்றும் பஞ்சாபில் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதால் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள் மற்றும் மால்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மால்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் எளிதாக தொற்று ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உணவகங்களில் பார்சல் நடைமுறையை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதே போல வழிபாட்டு தலங்களிலும் கூட்ட நெரிசலை தவிர்த்தல், கை சுத்திகரிப்பான், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here