மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு – 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறிய அறிவுரை!!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகளும் தளர்த்தப்பட்ட ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர்.

உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரசால் இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலை, முதல் அலையை விட அதிகளவில் மக்களை பாதிப்பிற்கு உள்ளாகியது. குறிப்பாக கடந்த மே, ஜூன் மாதங்களில் நாட்டின் பல மாநிலங்களில் இக்கொடிய நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதனால் பல மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அறிவித்தது.

பின்னர் அரசு எடுத்த தீவிர முயற்சிகளாலும், தடுப்பூசியின் பயனாலும் இரண்டாம் அலையின் பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்றின் பரவல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 8 மாநிலங்களில் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நிபுணர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என கணித்து இருந்தனர். அதன்படி தற்போது 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள தொற்றால், மத்திய அரசு கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here