விடாது கருப்பு போல் தொடரும் கொரோனா.. 40 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்!!

0

உலக அளவில் கொரோனா தொற்று மனித குலத்திற்கு மிக பெரிய இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த தொற்றால் உலகில் 18.45 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16.89 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39.93 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலையால் உலக நாடுகள் திண்டாடி வருகின்றனர். தொற்றின் வேகம் நாளாக நாளாக குறையும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் கொரோனா உருமாறி  அடுத்தடுத்து அலைகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததாக கருதப்படும் நிலையில் மூன்றாம் அலை பற்றிய பயம் அதிகரித்துள்ளது.

18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!

தற்போது உலக அளவில் இந்த தொற்றால் 184,546,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,993,035 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று இந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 168,893,022 ஆக உள்ளது. 77, 700 பேருக்கும் அதிகமானோர் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளனர்.

அதே போன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.  இரண்டாம் இடத்தில் இந்தியாவும் மூன்றாம் இடத்தில பிரேசிலும் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here