இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் – சுகாதாரத்துறை தகவல்!!

0

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறைந்து வரும் கொரோனா :

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் இருந்து வந்ததால் நாளுக்கு நாள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இதனை தடுக்கவும் இறப்பு விகிதத்தை குறைக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடுவது தவிர்க்கப்பட்டது.

 

மக்கள் பொது இடங்களில் கூடுவது தவிர்க்கப்பட்டதால் நோய் தொற்று  பரவும் விகிதம் படிப்படியாக குறைந்துவருகிறது. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனவும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 22,28,724 லில் இருந்து 1,14,428 ஆக குறைந்துள்ளது என கூறப்படுகிறது. 24 மணி நேரத்தில் 2,84,601 நோயாளிகள் குணமாகியுள்ள நிலையில், இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 2,51,78,011 குணமாகியுள்ளனர் என அறிக்கை வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here