கொரோனா சிகிச்சைக்கான காலி படுக்கைகள் விவரம் – புதிய இணையதள வசதி!!

0

நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா சிகிச்சைக்கான காலிபடுக்கை விவரங்களை அறிய இணையத்தளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி படுக்கைவிவரம் அறியும் இணையத்தளம்:

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று மக்களை அதிகமாக பாதித்து வருகிறது. சினிமா பிரபலம், அரசியல் ஆளுமைகள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டும் இறந்துகொண்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர். கொரோனா நோயாளிக்க்கண படுக்ககைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும் படுக்கைகள் இருப்பு பற்றி அறியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் காலி படுக்கைகள் பற்றிய விவரங்களை அறிவதற்காக தமிழக அரசால் இணையத்தளம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

https://tncovidbeds.tnega.org என்ற இணையத்தை பயன்படுத்தி கொரோனா சிகிச்சைக்கான காலிபடுக்கைகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளலாம் என அரசு சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here