கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுமாம் – ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!

0

கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மனக்குழப்பம் மற்றும் பக்கவாதம் வரை வர வாய்ப்புள்ளதாக அமெரிக்காவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்கள் எச்சரிக்கை:

நாடு முழுவதும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.  இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்த 150 பேரிடம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தினர்.

குறைந்து வரும் கொரோனா உயிரிழப்புகள் - உலக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!!!

இந்த ஆய்வின் முடிவில்,  73 சதவீதத்தினர் மனக்குழப்பத்துக்கு ஆளாகித் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலையில் தவிப்பதாகவும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்கள் இந்த நோயிலிருந்து மீள அதிக காலம் தேவைப்படுவதாகவும் அறிவித்தனர்.  இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆக்சிஜன் குறித்த பிரச்சினைகள் வருவதால் பக்கவாதம் ஏற்பட கூட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here