Thursday, May 13, 2021

மறுபடியும் லாக்டவுனா, ரொம்ப கஷ்டம் தான் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Must Read

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதாரம்:

கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வகையான தொழில் துறைகளும் முடங்கியது. மேலும் இந்தியாவில் பல தரப்பு மக்கள் தங்கள் வேலைகளை துளைத்து தங்களது வாழ்வாதாரத்தையே இழந்தனர். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் சரிந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்ததால் அனைத்து வகையான வேலைகளும் இயங்க தொடங்கியது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீள தொடங்கியது. மேலும் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் அபார வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பிரேமலதாவை கொரோனா டெஸ்ட் எடுக்க அதிகாரிகள் வலியுறுத்தல் – பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!

இதனால் நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுகையில், வருகிற ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலாண்டில் வருடாந்திர பொருளாதார  வளர்ச்சி  26.2% இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால் இது 25.5% ஆகவும் குறையலாம். மேலும் மஹாராஷ்டிராவில் மட்டும் ஜிடிபி 14.5% வகிக்கிறது. தற்போது அங்கு ஊரடங்கு ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கிராமத்து ஸ்டைலில் கொங்கு நாட்டு கோழி குழம்பு – கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!!

நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு கோழி குழம்பை சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த வாரம் வித்தியாசமான கோழி குழம்பை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -