Thursday, April 25, 2024

பள்ளி மாணவிகளுக்கு நாப்கின், மாணவர்களுக்கு முட்டை – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Must Read

அம்மா உணவகங்களில் தரமான உணவுகள் வழங்கவும், பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது, உயர்நீதிமன்றம்.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவலால், 7 ஆம் கட்டமாக பொது முடக்கம் தமிழக அரசு நீடித்து உள்ளது. இதனால், பலருக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவாமல் இருக்க நல்ல ஆரோக்கியமா உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதனால், 407 அம்மா உணவகங்களில் ஏழைகளுக்கு முட்டைகள் வழங்க வேண்டும் என்றும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 246 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுதா சார்பில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

கேள்வி எழுப்பிய நீதிமன்றம்:

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கினை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அரசு சார்பில் கூறப்பட்டது என்னவென்றால், தினமும் மக்களை வரவழைத்து முட்டை போன்ற அத்யாவசிய தேவைகளை வழங்குவது கடினமான ஒன்று என்றும், இதனை செய்யமுடியாததால், ரேஷன் கடைகள் மூலம் வழக்கமான அளவை விட கூடுதல் பருப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆண் குழந்தைக்கு தந்தை ஆனார் ஹர்திக் பாண்ட்யா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

அதே போல் நீதிமன்றம் சார்பில் மாணவியருக்கு நாப்கின்கள் போன்றவைகள் அரசு சார்பில் சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதனை தவறாமல் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது குறித்து அரசு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -