மூன்றாம் அலை எச்சரிக்கை: தமிழக அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை!!

0

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா மூன்றாம் அலையின் போது இந்தியாவில் தினசரி பாதிப்பு 1 லட்சமாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்தது. இரண்டாம் அலையின் போது மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்தாலும், மக்கள் கட்டுப்பாட்டு விதிகளை சரியாக பின்பற்றாமல் இருப்பதால் தான்போன்றவையே மூன்றாம் அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட காரணம் என்றும் மேலும் மூன்றாம் அலை பரவலை தடுக்க அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதனால் மூன்றாம் அலையின் பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு தற்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கணித்து இருந்த நிலையில் இந்த மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்..

தற்போது கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க ஆக்சிஜன் ஆணையர் என்ற புதிய பதவியை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. ஆக்சிஜன் ஆணையர் மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, விநியோகம் ஆகியவற்றை கண்காணிப்பார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here