எந்த நேரத்திலும் மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் – இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!!!

0

கடந்த கால அனுபவங்கள், சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா மூன்றாம் அலை என்பது தவிர்க்க முடியாது. எந்த நேரத்திலும் மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் உருமாறிய டெல்டா வைரஸினால் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வந்தது. இந்த தொற்று குறைவுக்கு ஊரடங்கு ஒரளவு கைகொடுத்திருக்கிறது. மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றியதும் கொரோனா பரவல் குறைந்ததற்கு ஒரு காரணம் தான்.

ஆனால் தற்போது இந்தியாவின் சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனவே ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளை சில மாநில அரசுகள் நீக்கி வருகின்றன. டெல்டா வைரஸ் இரண்டாம் அலையை ஏற்படுத்தியதை போன்று, மேலும் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் மூன்றாம் அலைக்கு காரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை பரவலை இந்தியாவில் தவிர்க்க முடியாது என்றும், மூன்றாம் எந்த நேரத்திலும் தாக்கலாம், சுற்றுலா, யாத்திரை மக்களுக்கு அவசியமானது தான். இருந்தாலும் சில நாட்கள் காத்திருக்கலாம் என்று  இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here