டெல்டா வைரஸால் கொரோனாவின் புதிய அலை – உலக சுகாதார நிறுவனம் கவலை!!  

0

கொரோனா மூன்றாம் அலையை மற்றும் கொரோனா வைரஸின் புதிய அலையை உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸின் திரிபு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும். இரண்டாம் அலைக்கு காரணமான டெல்டா வைரஸ் மேலும் டெல்டா பிளஸ் ஆக உருமாறியுள்ளது. இதனால் மூன்றாம் அலை குறித்த பயம் மக்களிடையே பரவலாக உள்ளது.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்த தொற்று பாதிப்பு மீண்டும் பழையபடி அதிகரித்து வருகிறது. அதே சமயம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது மக்களுக்கு மேலும் கவலை அளித்துள்ளது.

தற்போது உள்ள நோய் பாதிப்புகளில் 50 விழுக்காடு பாதிப்பு டெல்டா வைரஸால் உருவாக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனமும் மூன்றாம் மற்றும் கொரோனா வைரஸின் புதிய அலையை டெல்டா ரக வைரஸின் திரிபு கொரோனா ஏற்படுத்த அதிக வாய்ப்பிருப்பதாக கவலை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here