கொரோனா மூன்றாம் அலை, இரண்டாம் அலையை விட தீவிரம் குறைந்ததாகவே இருக்கும் – ICMR தகவல்!!

0

கொரோனா மூன்றாம் அலை, இரண்டாவது அலையைவிட தீவிரம் குறைந்ததாகவே இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள வேளையில் நிபுணர்கள் மூன்றாம் அலை பற்றிய தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர். மேலும் மூன்றாவது அலை கணிப்பை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களும் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் முன்பைப் போல முகக்கவசம் இல்லாமல் பொது இடங்களில் கூடுவதைப் பார்க்க முடிகிறது. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது ஏற்கனவே பிரதமர் மோடி கூறி இருந்தார். இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் வீரியம் பற்றி  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் தொற்றுநோயியல் பிரிவு தலைவரான டாக்டர் சமீரன் பண்டா கூறியதாவது “நாடு தழுவிய அளவில் மூன்றாவது அலை இருக்கக்கூடும் என்றாலும், அதற்காக இரண்டாவது அலை போல தீவிரமானதாக இருக்கும் என அர்த்தமில்லை எனவும் மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது, முதல் இரண்டு அலைகளில் மக்களிடையே நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, உருமாற்ற வகை கொரோனா உருவாவது, அல்லது மிகவும் வேகமாகப் பரவக்கூடிய உருமாற்ற வகை உருவாவது ஆகிய நான்கு காரணங்கள் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here