கொரோனா மூன்றாம் அலை: இன்று முதல் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட தடை!!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

தமிழகத்தில் சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே மாநில அரசு தளர்த்தப்பட்ட ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை நேற்று (30 ஜூலை 2021) அறிவித்தது.

ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் முடிந்த நிலையில் நேற்று முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதே சமயம் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை மூட, மாவட்ட ஆட்சியர்கள் அல்லது மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!

இந்நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் இன்று முதல் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு குறைந்தததை எண்ணி பெரு மூச்சு விட்ட மக்கள் தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை கூடுவதால் கலக்கத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை வராத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here