கொரோனா 2வது அலையின் கோர தாண்டவம் – 3,070 போலீசார் பாதிப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் 3,070 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

காவல்துறை தகவல்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக விமானங்களில் பயணிக்கலாம் என்று விலக்கு அளித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலையில் தமிழகத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம், போலீசார் உயிரிழப்பு அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன் படி 3,070 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா 2-வது அலையால் தமிழகத்தில் 70 போலீசார் இறந்த நிலையில் இப்போது 1,722 போலீசார் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இதில் காவல் துறையினர் அதிகமாகப் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

நோய் அறிகுறி வரும்போதே மக்கள் வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். முதல் அலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 13.1 சதவீதம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2-வது அலையில் 14.4 சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here