கொரோனா 2ம் அலையின் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !!!

0
கொரோனா 2ம் அலையின் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !!!
கொரோனா 2ம் அலையின் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !!!

கொரோனா 2ம் அலையின் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !!!

தமிழகத்தில் கொரோனா பரவல் முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் 2ம் அலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 2020ல் தான் கொரோனா முதல் அலை பரவ தொடங்கியது. இதனால் மார்ச் மாத இறுதியில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய அரசு. இதனால் தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. அதன் பிறகு மாநில அளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பினர்.

அதன் பிறகு தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடினர். இதனால் கொரோனா 2ம் அலை பரவ தொடங்கி கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. இதனை அடுத்து இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தற்போது “மதுரை தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், ரெமிடிசிவிர் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அப்போது ஒரு குற்றசாட்டை முன் வைத்துள்ளார். அதாவது கொரோனா பரவல் முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் 2ம் அலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here