மொத்தமும் மண்ணா போச்சு.. கோப்ரா படத்தால் மனமுடைந்த விக்ரம்.. வசூலை கேட்டு அழாத குறை தான்!

0
மொத்தமும் மண்ணா போச்சு.. கோப்ரா படத்தால் மனமுடைந்த விக்ரம்.. வசூலை கேட்டு அழாத குறை தான்!

சியான் விக்ரம் நடித்து அண்மையில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கோப்ரா திரைப்படம்:

தமிழ் திரையுலக வரலாற்றில் உடம்பை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் கமல்ஹாசனுக்கு அடுத்து இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். அதே போல் உடம்பை உருக்கி விக்ரம் நடித்த படங்களான ஐ, சேது, காசி போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதனால் தற்போது வரை முன்னணி நடிகராக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்து கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் வெறும் ரூ. 12 கோடி தான் வசூலித்தது. அதுமட்டுமின்றி சனிக்கிழமை அன்று ரூ. 3.95 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 4.70 கோடியும் வசூல் செய்துள்ளது. மொத்தமாக தற்போது வரை கோப்ரா திரைப்படம் ரூ 21 கோடியை வசூலித்துள்ளது. இதனால் நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினர், குறிப்பாக ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வார இறுதிக்குள் படத்தின் வசூல் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here