“குக் வித் கோமாளி” ஷிவாங்கி செய்த சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த ஷிவாங்கிக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் கூடி விட்டார்கள். இதனால் அனைவரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சி

பிரபல பின்னணி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான், ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் பங்கேற்றார். பாடகியின் மகள் என்ற காரணத்தினாலோ என்னவோ அவருக்கு இயற்கையிலேயே குரல் மிகவும் இனிமையானதாக இருந்து உள்ளது. அந்த நிகழ்ச்சியில் தனது இனிய குரலால் தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த நிகழ்ச்சியில் அவர் கடுமையான போட்டியாளராக இருந்து வந்தார். இப்படியாக இருந்தாலும், இவர் பேசும் போது இவரது குரல் சற்று வித்தியாசமானதாக இருக்கும். இதனை இவரது நண்பர்கள் பலரும் கிண்டல் செய்வார்களாம். இதன் காரணமாகவே இவர் “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்று நினைத்தாராம். பின், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

நடுரோட்டில் செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை அலியா மானசா – வைரலாகும் வீடியோ!!

இவரது சேட்டைகளுக்கு அளவே கிடையாது என்று தான் கூற வேண்டும். இவரது அந்த குழந்தைத்தனமான குணத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதிலும் இரண்டாம் சீசனில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

இதன் விளைவாக ஷிவாங்கியின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் 3 மில்லியனை கடந்துள்ளது. இதனை அடுத்து அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here