குக் வித் கோமாளி சீசன் 4 ஷோவில் இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேற போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதுவரை 3 சீசன் முடிவடைந்த நிலையில் 4 வது சீசனில் விசித்ரா, மைம் கோபி, ஷெரின், சிருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியன், காளையன், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடி வந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்களுடன் கடந்த மூன்று சீசனில் பங்கேற்ற கோமாளிகளும் களமிறங்கியுள்ளனர். ஆனால் இதில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஷால் மற்றும் ஷெரின் என 5 பேர் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். மீதமுள்ள Andreanne Nouyrigat, மைம் கோபி, டி ஆர் கே கிரண், சிவாங்கி கிருஷ்ணகுமார், விசித்ரா, கஜேஷ் ஆகியோர் ஸ்ட்ராங்கான போட்டியாளராக விளையாடி வருகின்றனர்.
இனிமே இந்த சீரியல் ஒளிபரப்பாகாது., கண்ணீர் விட்ட நடிகை!!
மேலும் இவர்களில் யார் இறுதிவரை செல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் கஜேஷ் வெளியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.