
குக் வித் கோமாளி சீசன் 4-ல் அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்த போட்டியாளர் குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 4:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மத்திய அங்கமாக திகழ்ந்து வருவது தான் குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்களை கடந்துவிட்ட கோமாளி, சமீபத்தில் நான்காவது சீசனை தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களில் இல்லாத விதமாக புதுப்புது கோமாளிகளை இறக்கி காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் அசத்தி வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதுவரை இந்த ஷோவில் இருந்து ஒருவர் மட்டுமே எலிமினேட் ஆகியுள்ளார். இந்த நிலையில் இந்த வாரம் இம்யூனிட்டி ரவுண்டை வெற்றி பெற்று அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிய போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதலில் நடந்த அட்வான்டேஜ் ரவுண்டில் கோமாளியான சிங்கப்பூர் தீபன் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து மெயின் ரவுண்டுக்கு கிட்டத்தட்ட 9 போட்டியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு தங்களது சமையல் கலைகளை இறக்கினர்.
ஆனால் அதில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இரண்டாவது சேலஞ்ச் ரவுண்டுக்கு சென்றனர். அந்த நான்கு போட்டியாளர்களுமே நன்றாக சமைத்த போதிலும் நடுவர்களாகிய வெங்கடேஷ் பட் சார் மற்றும் செஃப் தாமு சார் இருவரிடமே நல்ல கமெண்ட் பெற்று சூப்பர் சிங்கர் சிவாங்கி இந்த வாரம் இம்யூனிட்டி சேலஞ்ச் சுற்றை வெற்றி பெற்றார். இதனால் அடுத்த வாரம் நடைபெறும் எலிமினேஷன் சுற்றில் அவர் கலந்து கொள்ள தேவையில்லை. இதனால் சிவாங்கி அளவு கடந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.