குக் வித் கோமாளி 4 : போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ? ஆனா இந்த முறை இது எல்லாமே புதுசு!!

0
குக் வித் கோமாளி 4 : போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ? ஆனா இந்த முறை இது எல்லாமே புதுசு!!
குக் வித் கோமாளி 4 : போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ? ஆனா இந்த முறை இது எல்லாமே புதுசு!!

விஜய் டிவியில் இந்த வாரம் முதல் துவங்க உள்ள, குக் வித் கோமாளி 4 குறித்த லேட்டஸ்ட் அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

லீக்கான அப்டேட் :

விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான, குக் வித் கோமாளி சீசன் 4 இந்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் டிவி தரப்பிலிருந்து ஏற்கனவே வெளியாகி விட்டது. வழக்கம்போல் இந்த சீசனிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இணைந்துள்ளனர். இதே போல், விஜே ரக்ஷன் இந்த சீசனை தொகுத்து வழங்க உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் கடந்த இரண்டு சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், சிவாங்கி மற்றும் பாலா ஆகியோர் வெள்ளித்திரையில் பிஸியாக இருப்பதால் இந்த சீசன்களில் கலந்து கொள்வார்களா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்களைத் தாண்டி இந்த சீசனில் கோமாளிகளாக ஜி பி முத்து, ஓட்டேரி சிவா, ரவீனா, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட புது முகங்கள் களமிறங்க உள்ளனர் .

ரஜினியை தொடர்ந்து குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்.., இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!!

இதே போல் போட்டியாளர்களாக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார், விஜே அர்ச்சனா, பிக் பாஸ் தாமரை செல்வி,நடிகை தேவயானி போன்றோர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீசனில் புதுமுக கோமாளிகள் களமிறங்குவதால், நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு ஹிட் ஆகுமா? என்பதை தற்போது பலரின் கேள்வியாக உள்ளது. இதற்கான பதில், நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்பு தான் கிடைக்கும் என்பதே உண்மையாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here