குக் வித் கோமாளி 4 : என்னது இந்த பிரெஞ்சு நடிகை குக்கா? கன்ஃபார்மான 9 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!!

0
குக் வித் கோமாளி 4 : என்னது இந்த பிரெஞ்சு நடிகை குக்கா? கன்ஃபார்மான 9 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!!
குக் வித் கோமாளி 4 : என்னது இந்த பிரெஞ்சு நடிகை குக்கா? கன்ஃபார்மான 9 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!!

விஜய் டிவியில் தொடங்கவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின், ஒன்பது போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான லிஸ்ட்:

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4, வரும் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இயக்குனர் கிஷோர் ராஜ்குமார், ராஜ் ஐயப்பன், விஜே விஷால் மற்றும் இதற்கு முந்தைய சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி ஆகியோர் குக்குகளாக களமிறங்கியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களைத் தொடர்ந்து உத்தேச பட்டியலில் இருந்த பிக் பாஸ் ஷெரினா மற்றும் சீரியல் நடிகை விசித்ரா ஆகியோரும் கன்ஃபார்ம் ஆகியுள்ளனர். இவர்கள் போக, ஃபைட் மாஸ்டர் காளையன், நடிகை சிருஷ்டி டாங்கே மற்றும் பிரெஞ்சு நடிகை Andreanne Nouyrigat ஆகியோரும் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

சமந்தா செஞ்ச அதே தப்பை செய்யும் நடிகை ஹன்சிகா., ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க!!

இதில் பிரெஞ்சு நடிகை Andreanne ரஜினி முருகன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த 9 போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here