ரசிகர்களின் வெறுப்பிற்கு உள்ளான குக் வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் – அவரே அளித்த விளக்கம்!!

0
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!

குக் வித் கோமாளி சீசன் 3யை எதிர்பார்த்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்து கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஒளிபரப்பான முதல் நாளிலேயே சில காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இரண்டு சீசன்களை கடந்து தற்போது தான் குக் வித் கோமாளி சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா மற்றும் சக்தி ஆகியோர் கடந்த இரண்டு சீசனிலும் கோமாளிகளாக இருந்தனர். புகழ் தற்போது சில திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பதால் சீசன் 3ல் கலந்துகொள்ளவில்லை.

பாவனி சம்மதித்ததால் தான் அப்படி செய்தேன் – பிக் பாஸ் அமீர் பகிரங்க பேட்டி!!

இதனால் புகழுக்கு பதிலாக சூப்பர் சிங்கர் பிரபலம் பரத் கோமாளியாக களமிறங்கினார். கடந்த வார நிகழ்ச்சியில் நடுவர் வெங்கடேஷ் பட் கோமாளியாக அறிமுகமாகியுள்ள பரத்தை துரத்தி துரத்தி அடித்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்ததோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இது குறித்து வெங்கடேஷ் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “இதை ஒரு டிவி நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்கள். மேலும் ஒரு சிலரை அது புண்படுத்தி இருக்கலாம், ஆனால் உண்மையில் எங்களது நடவடிக்கைகள் யாரையும் காயப்படுத்தவில்லை. ஜாலியாக பாருங்கள். டேக் இட் ஈஸி” என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here