அடிச்சது ஜாக்பாட் – விஜய் சேதுபதியுடன் இணையும் குக் வித் கோமாளி புகழ்!!

0

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 46ஆவது திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலம் புகழ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் புகழின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் டிவி புகழ்

சினிமாவில் வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்கள் அந்த வாய்ப்பு கிடைத்ததும் அதை சரியாக பயன்படுத்துகிறார்களா என்றால் அது ஒரு கேள்விக்குறி தான். சரியான நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் முன்னேற முடியும். இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக இருப்பவர் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் புகழ்.  விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் சிறிய வேடங்களில் நடித்து வந்த புகழுக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த நிகழ்ச்சியில் புகழின் அட்டகாசங்கள் மக்கள் மத்தியில் கிளிக் ஆன பிறகு, இவருக்கு நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியினால் புகழால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் புகழ், விஜய்யின் 65ஆவது திரைப்படம் மற்றும் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பொடுகு தொல்லை இனி உங்களுக்கு இல்லை – இதோ ஈஸியான டிப்ஸ்!!

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் புகழ் இணைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி போலீசாக நடிக்கும் இத்திரைப்படத்தில் புகழ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தில் நாயகியாக 2018ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அணுகீர்த்தி வாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். இந்த தகவல்கள் வலைதளங்களில் வைரலாகி வர புகழின் ரசிகர்கள் எக்கச்சக்க சந்தோசத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here