குக் வித் கோமாளி புகழ் தன் அம்மாவின் பிறந்த நாளில் செய்த காரியத்தை பாருங்க – வைரலாகும் வீடியோ!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான புகழ் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ்

விஜய் டிவியில் 2019 இல் ஆரம்பித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் டிவியில் ஏற்கனவே சமையல் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரபலமானது தான்.

ஏனெனில் 2012 இல் ‘சமையல் சமையல்’ என்ற மாபெரும் போட்டியே நடைபெற்றது. அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி புதிய கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது குக்குகளை தொந்தரவு செய்வதற்காகவே கோமாளிகள் இருக்க அதனையும் தாண்டி எப்படி சமைத்து முடிக்கிறார்கள் என்பது தான் டாஸ்க். இதில் ஷிவாங்கி, புகழ், மணிமேகலை செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

இதில் புகழ் தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அடுத்த வடிவேலு என்று சொல்லும் அளவிற்கு முன்னேறினார். தற்போது வலிமை படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பியுள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில் அவரது அம்மாவிற்கு ஊட்டி விடுவது போன்ற விடியோவை வெளியிட்டுள்ளார். அவரது அம்மாவிற்கு இன்றைக்கு பிறந்த நாள் வேறு. அம்மா மீது இவ்வளவு பாசமா?? என்று பலரும் கண்கலங்கியுள்ளனர். அந்த விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here