குக் வித் கோமாளியில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வரும் பிக்பாஸ் பிரபலம் – தெறிக்கவிடும் ப்ரோமோ!!

0
rio

விஜய் டிவியில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு சுற்று நடைபெறவுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் பிரபலமும், விஜய் டிவி நட்சத்திரமுமான ரியோ கலந்து கொள்ள உள்ளார்.

குக் வித் கோமாளி

இந்த வாரம் குக் வித் கோமாளி எபிசோடில், நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன எல்லா போட்டியாளர்களுக்கும் வைல்ட் வார்டு சுற்று நடைபெறவுள்ளது. இந்த சுற்றில் ஆறு போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் ஜெயிக்கும் ஒருவர் மட்டுமே குக் வித் கோமாளியின் பைனல் சுற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் வைல்ட் கார்டு சுற்றில் பவித்ரா, ரித்திகா, தர்ஷா குப்தா, ஷகீலா, மதுரை முத்து, தீபா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. அதில் எந்தெந்த குக்குகளுக்கு எந்தெந்த கோமாளிகள் என காட்டப்பட்டிருந்தது.

குட்டி டவுசரில் தொடையழகை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

தற்போது குக் வித் கோமாளியின் இன்னும் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதில் ரியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். நிறைய ஃபன்னுடன் கலாட்டாவும் சேர்ந்து இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குக்குகள் கையில் அட்டை கொடுக்கப்பட்டு அதன் மீது பலூன் வைத்து நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிறகு தோசை ஊத்தும் டாஸ்கில் தோசை ஊற்றுவதற்கு தடுமாறுகிறார் தீபா. பிறகு சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்னால் இலையில் ஏன் ஸ்வீட் வைக்குறாங்க தெரியுமா என செஃப் தாமுவிடம் மதுரை முத்து கேட்க தெரியாது என தாமு கூறுகிறார்.

எதுக்குன்னா அதை சாப்பிடுவதற்கு தான் என மதுரை முத்து கூற பலூனை எடுத்து அடிக்கப்போகிறார் செஃப் தாமு. இவ்வாறு வெளியாகியுள்ள குக் வித் கோமாளி ப்ரோமோவில் தெரிகிறது இந்த வாரமும் எக்கச்சக்க ஃபன் இருக்கும் என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here