கீர்த்தி சுரேஷை உரித்து வைத்திருக்கும் “குக் வித் கோமாளி” பிரபலம் – ஷாக்கான ரசிகர்கள்!!

0

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான், நடிகை பவித்ரா. இது வரை யாரும் பார்த்திராத இவரது சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

நடிகை பவித்ரா

தமிழ் சினிமாவில் குறும்படங்களில் மூலமாக அறிமுகமானவர் தான், நடிகை பவித்ரா. இவர் முதன் முதலாக பிரபலமான குறும்படமான “3 ஷேட்ஸ் ஆப் லவ்” என்ற குறும்படத்தில் தான் நடித்தார். மிகவும் எதார்த்தமனாகவும், அதே சமயம் அனைவருக்கும் மிகவும் பிடித்த வகையில் இவர் நடித்ததால் இவருக்கு என்று ரசிகர்கள் உருவாகினர். ஆனால், இவரது திறமைக்கு ஏற்றாற்போல அடுத்ததாக எந்த வித வேடங்களும் இவருக்கு கிடைக்கவில்லை.

கண்ணம்மா தூங்கும்போது விஷ ஊசி போடும் வெண்பா – நடக்கப்போகும் விபரீதம் என்ன??

இவர் பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் கூட பங்குபெற்றுள்ளாராம். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை சென்று மூன்றாவது பரிசினை வென்றுள்ளார். அந்த சுழலில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் வித்தியாசமான உணவு வகைகளை சமைத்தார் என்றே கூறலாம்.

அதே போல் அந்த நிகழ்ச்சியில் இருந்த புகழுடன் இவர் அடித்த லூட்டிகள் அனைவருக்கும் மிகவுமே பிடித்திருந்தது. இவர் இறுதி போட்டி வரை அந்த நிகழ்ச்சியில் சென்றார். இப்படியாக இருக்க, இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது வரை யாருமே பார்த்திராத வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்றே கூறலாம். தற்போது இருப்பது போலவே பவித்ரா அந்த புகைப்படத்திலும் கியூட்டாக இருக்கிறார். மேலும் ஒரு சாயலில் கீர்த்தி சுரேஸை உரித்து வைத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here